இப்படி பண்ணிட்டியே செல்லம்.! – லட்சக்கணக்கில் வால் மார்ட்டில் பொருட்கள் வாங்கிய குட்டி குழந்தை!! – அதிர்ந்த பெற்றோர்!

 

தனது தாயின் போனில் விளையாடிக் கொண்டிருந்த போது வால்மார்ட் ஷாப்பிங் கார்ட்டில் வைக்கப்பட்டிருந்த 1.4 லட்சம் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்களை ஆன்லைனில் தவறாக ஆர்டர் செய்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதியின் 2 வயது குழந்தை பற்றிய செய்திதான் தற்போது அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியின் ஹாட் டாக்

நியூ ஜெர்சியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரமோத் குமார், மற்றும் மது தம்பதியரின் மூன்றாவது மகன் அயன்ஷ் குமாருக்கு வெறும் 22 மாதம்தான் ஆகிறது, இருப்பினும் செல்போனை எப்படிக் கையாள்வது என்பது அவருக்குத் தெரியும். இந்நிலையில் தவறுதலாக தனது தாயின் மொபைல் போன் மூலம் #walmart #onlineshopping CARTல் உள்ள பர்னிச்சர் பொருட்களை சுமார் 1.40 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் செய்து விட்டார். பொருட்கள் வீடுகளுக்கு வந்து இறங்கிய பின்பே அவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.

இப்போது அத்தனை பொருட்களையும் வீட்டில் வைப்பதற்க்கு இடமில்லாமல் குடும்பம் தவித்து வருகிறது, “இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, அவர் இவ்வளவு ஆர்டர் செய்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் இப்போது ஒரு வாரம் முழுவதும் பேக்கேஜ்களை வரப்பெறுகிறோம் என தம்பதிகள் fox News வசம் தெரிவித்தனர்.

“ஆரம்பத்தில் நாங்கள் எல்லாவற்றையும் திருப்பித் தந்து விடுவோம் என்று நினைத்தோம்,” என்று அப்பா பிரமோத் ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டலிடம் கூறினார். “ஆனால் இப்போது, ​​​​இந்தச் செய்தி பலரை சிரிக்க வைத்து அவர்களை சிரிக்க வைத்த பிறகு – குறிப்பாக இந்த மோசமான கோவிட் நேரத்தில், இது மக்களை சிரிக்க வைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.எனவே எங்கள் மகன் ஆர்டர் செய்த சில பொருட்களை அவனது நினைவாக வைத்திருக்க விரும்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.

உங்களது மூத்த குழந்தைகளில் யாராவது ஏதாவது செய்திருக்கிறார்களா என்று குழந்தையின் தந்தையிடம் கேட்டதற்கு, “இல்லை, இது எங்களுக்கு முதல் சம்பவம். ஒருவேளை எங்கள் சிறிய குழந்தை கோவிட் காலத்தில் பிறந்த குழந்தையாக இருப்பதால் இப்படி நடந்திருக்கலாம். ஏனெனில் அவர் பிறந்தது முதல் விர்ச்சுவல் கேஜெட் உலகத்தையே அதிகம் பார்த்திருக்கிறார்” என பிரமோத் குமார் பதிலளித்தார்,

இத்தனையும் பார்த்து குறு குறு குழந்தை அயன்ஷ் குமார் கவலையே படாமல் குதூகலத்துடன் உள்ளான், இதற்குள் அவனது அண்ணனும் அக்காவும் ஆர்டர் செய்த பொருட்கள் மீது அயன்ஷ் குமார்.. ஐ அமர வைத்து ‘ஐ லவ் ஷாப்பிங்’ என  தலைப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். அவனது புகைப்படத்தில் ‘ ஐ லவ் ஷாப்பிங்’ என்ற வார்த்தைகளைச் சேர்த்ததை அப்பா பிரமோத் குமாரால் எதிர்க்க முடியவில்லை, ரசிக்கத்தான் முடிந்தது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post