தூத்துக்குடி : மலேசியாவிற்க்கு கடத்த முயன்ற சுமார் 7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - வருவாய் புலனாய்வு துறை நடவடிக்கை

தூத்துக்குடியிலிருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக மரப்பெட்டிகளில்  (Pallets) மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 7 கோடி மதிப்புள்ள சுமார் 12 டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடியிலிருந்து மலேசியா போர்ட் கிலாங் துறைமுகத்திற்க்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களுர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி சிப்காட் அருகில் உள்ள தனியார் சரக்கு பெட்டி முனையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் திருப்பூர்  3- 308 ராதாகிருஷ்ணன் நகர், பிச்சம் பாளையம் என்ற முகவரியில் மோகன் குமார் என்பவர் நடத்தி வரும் 'ஸ்டோர்ஸ்' என்ற நிறுவனம் இரும்பு பைப்புகளை  ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த மரப்பெட்டிகளை (Pallets) சோதனை செய்ததில் அதில் முன் பக்கத்தில் உள்ள பெட்டிகளில் மட்டும் இரும்பு குழாய்களை வைத்து பின்புறம் முழுவதும் செம்மரக்கட்டைகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்ததையடுத்து, ஏற்றுமதிக்காக வைத்திருந்த 12 டன் எடையுடைய 9 மரப்பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த மோகன் குமார் என்பவரையும், சரக்குகளை ஏற்றி வந்த லாரி டிரைவரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post