தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!


தூத்துக்குடி 4ம் ரயில்வே கேட்டில் 22வயதுமிக்க இளம்பெண் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகள் ரயில் இன்று காலை 9 மணிக்கு புறப்பட்டது. 


4-ம் கேட் அருகில் இந்த ரயில் வந்து கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் திடீரென ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், தலை துண்டாகியும் உடல் சிதறியும் உயிரிழந்தார். 

இது குறித்த தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், தர்ம பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

இறந்து கிடந்த பெண் சுடிதார் அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post