தூத்துக்குடி - திரேஸ்புரம் பகுதி திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் கபாடி போட்டி - இரண்டு நாள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திரேஸ்புரம் பகுதி திமுக மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தூத்துக்குடி லுர்தம்மாள்புரம் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் தொம்மை சேசுவடியான் திடலில் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. 

இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுகளும் வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை திரேஸ்புரம் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து செய்து வருகின்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post