தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி.! - வீட்டுக்கு வந்த 15 நாளில் நிகழ்ந்த சோகம்.!

தூத்துக்குடி டூவிபுரம் 3ம் நம்பர் தெருவில் வசிந்த வந்தவர் சுரேஷ் வயது (40) த/பெ கோவிந்தசாமி. பெயிண்டரான இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த வருடம் மனைவி சுடலைக் கனி இறந்து விட்ட நிலையில், தனது இரண்டு குழந்தைகளையும் நெல்லையில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு தூத்துக்குடியில் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் தனது மகனைக்காண சுரேஷின் தாயார்  டூவிபுரம் 3ம் நம்பர் தெருவில் 15 நாட்களுக்கு முன்பு குடியேறிய வீட்டிற்க்கு வந்துள்ளார். வீட்டின் கதவை திறந்த அவர் , வீடு இடிந்து விழுந்து தனது மகன் பிணமாக கிடப்பதை கண்டு அலறியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த மத்திய பாகம் போலீசார், தீயனைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி சுரேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து சில மணி நேரம் ஆகி விட்டதாக தெரிவித்தனர்.

வீடு இடிந்து விழுந்தும் அக்கம் பக்கம் யாரும் இல்லாத காரணத்தால், நடந்த சம்பவம் அவருடைய தாயார்  வந்து பார்க்கும் வரை தெரியாமலே இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அண்ணாநகரில் இதே போல பழைய வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும், அவரது தாயாரும் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஆவதற்க்குள் அதே போல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post