சிங்கம் பட போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் தலை துண்டித்து கொலை - தூத்துக்குடியில் பரபரப்பு.!


தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் ( சிங்கம் படம் சூட்டிங் நடைபெற்ற இடம் ) வாலிபர் தலை தூண்டித்து கொலை பரபரப்பு - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கு அமைந்துள்ள ஜார்ஜ் ரோட்டில் தமிழ்நாடு மாநில பனை மற்றும் நார்ச்சத்து மார்க்கெட்டிங் கூட்டமைப்புக்கான ஒரு பாழடைந்த கட்டிடம் ஒன்று உள்ளது.

இந்த கட்டிடம் தற்போது எந்தவித பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் காவல் நிலையமாக காட்சிப்படுத்தப்பட்டது. 


இந்த காவல் நிலையத்தில் நடிகர் சூர்யா, நடிகர் விவேக் ஆகியோர் நடிப்பில் பல நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பின்னர் பாழடைந்த நிலையில் இந்த கட்டிடம் காட்சி அளிக்கிறது. அந்த பகுதிக்குள் அந்நியர்கள் யாரும் செல்ல மாட்டார்கள்.

இந்த நிலையில் இன்று காலை அந்த கட்டிடத்துக்கு மேலே ஏராளமான காக்கைகள் கூட்டமாக கூடியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தென்பாகம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

விரைந்து வந்த காவல் துறையினர் அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தை ஆய்வு செய்ததில் ஒன்றுமில்லாத நிலையில் மேல் தளத்திற்கு சென்று பார்க்கையில் திறந்த வெளியில் ஒரு நபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ் தலைமையிலான காவலர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் நேரடியாக வந்து பார்வையிட்டு . தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இறந்த நபர் பற்றிய விபரங்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Previous Post Next Post