மொத்த விலை குறியீடு பணவீக்கம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு -மே மாதத்தில் 15.88 சதவீதமாக அதிகரிப்பு.!

 

எரிபொருள், உலோகம், ரசாயனங்கள் ஆகியவற்றின் விலை ஏற்றம் காரணமாக, இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது என இன்று வெளியிடப்பட்ட அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து 14 மாதங்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளது. wholesale price index (WPI) அடிப்படையிலான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 15.08 சதவீதமாகவும், அதற்கு முந்தைய மாதத்தில் 14.55 சதவீதமாகவும் இருந்தது. மே 2021 இல், வர்த்தகம் மற்றும்தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, WPI அடிப்படையிலான பணவீக்கம் 13.11 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் 2022 உடன் ஒப்பிடும்போது 2022 மே மாதத்திற்கான WPI குறியீட்டில் மாதந்தோறும் மாற்றம் 1.38 சதவீதமாக அதிகரித்து உள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post