தூத்துக்குடியில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை - நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது பயங்கரம்.!


தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தந்தையை கொல்ல அரிவாளோடு பாய்ந்த மகனை,   தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்அழகன் (55) இவர் இன்று காலை தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக தனது சகோதரன் கடல் ராஜா, சகோதரனின் மகன் காசி துரை ஆகியோருடன் ஆஜராக வந்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள மணி நகரில் காரில் இருந்து இறங்கி வெளியே வந்த தமிழ் அழகனை அவரது மகன் காசிராஜன் (36) அரிவாளால் தந்தையை வெட்ட முயன்ற போது தந்தை மற்றும் உடன் இருந்தவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டு தப்பிய நிலையில் மகனிடம் உள்ள அரிவாளை பிடுங்கி தந்தை மகனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார் 


தகவலறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயங்களுடன் இருந்த தமிழழகனை கைது செய்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 

ஏற்கனவே தந்தையை மகன் இரண்டு முறை கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது இது தொடர்பாக புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல் நிலையம், எதிரே உள்ள தெருவில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post