"நான் நாடாரு, நீ தேவரு, ஆனா ஸ்கூல் இப்ப யாரு கைல இருக்கு? : ஜாதி வெறியை தூண்டும் தூத்துக்குடி ஆசிரியை பேச்சு -சமூக வலைத்தளத்தில் வைரலான ஆடியோ!- இரு ஆசிரியைகள் சஸ்பெண்ட்.!

 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனிடம் ஜாதி வெறியை தூண்டும் வகையிலான ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட சாதியினருக்கு செல்லக்கூடாது என்பதற்காக தனது மாணவனிடம் 

" நான் நாடாரு, நீ தேவரு, ஆனா இப்போ ஸ்கூல் அவுங்க கையில போகப் போகுது, அவங்கன்னா யாரு ?  

"எஸ் ஸி டீச்சர் "

ம்.. அவங்ககிட்ட போனா சரியா இருக்குமா ? என்கிறார்...

https://twitter.com/krajesh4u/status/1537281980559413249?t=potte59pAsqorjJV50kmJQ&s=19

இதைக் கேட்ட மாணவன் " எல்லோரும் சமம்தானே டீச்சர் " எனச் சொல்ல ஒரு விநாடி திகைத்துப் போய்..." நீ அப்படி வர்றீயா, ரொம்ப நல்ல பையனா இருக்கியே, அவங்க வந்தா உங்க ஊர் புளியங்குளம் பசங்கள ஸ்கூல்ல சேர்க்கவே மாட்டாங்க பரவால்லியா" என குண்டை தூக்கி போடுகிறார்.

அப்படியா டீச்சர், என அதிர்ந்ந்து இது தொடர்பாக தான் ஊரில் எடுத்து சொல்வதாகவும் , கம்யூட்டர் டீச்சரிடம் பேசுவதாகவும் உறுதியளிக்கிறார்.

இதை ஏற்றுக் கொண்ட டீச்சர், "நான், ஜாதி பார்க்குற ஆளு கிடையாது, நீ என்ன ஜாதின்னு கூட தெரியாது, நீ நல்ல பையனா இருக்குற அதனால உங்கிட்ட சொல்றேன்" என நான் நாடாரு நீ தேவரு என முதலில் பேசியதை மறந்து அந்த சிறுவனிடம் ஜாதிப் பிரிவினையை விதைக்கிறார்.

இது அத்தனையும் ரெக்கார்ட் செய்த அந்த மாணவன் சமூக வலைத்தளத்தில் அதை பதிவிட... இப்போது அது வைரலாகி "வெரிகுட் டீச்சரம்மா சஸ்பென்ட் ஆகி வழக்கை சந்திக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் "என சமூக வலைத்தளங்களில் கமென்ட்ஸ் பறக்கிறது. 

இந்நிலையில் சாதி ரீதியான சர்ச்சை ஆடியோ வைரலானதையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே, மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணையை துவங்கினார்.. தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.





Ahamed

Senior Journalist

Previous Post Next Post