தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் - கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் நடைபெற்றது.!*தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர்/  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நேற்று நடைபெற்றது.


மாவட்ட ஆட்சித்தலைவரும், தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு நிர்வாக அலுவலர் செந்தில்ராஜ்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு இணை தலைவரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  செய்தியாளர்களிடம் பேசுகையில்:

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. விமான நிலையத்தில் ஓடுதளம் நீளத்தை அதிகமாக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும். 

விரைவிலேயே தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்கக்கூடிய வசதி உருவாக்கப்படும். ஒரே நேரத்தில் 300 பயணிகள் வருவதற்கும், இங்கிருந்து 300 பயணிகள் செல்வதற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். 

மேலும் கார்கோ வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் மற்றும் விமான நிலைய குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post