குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் 9வது இடம் பிடித்து வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி பெற்ற காவல் ஆய்வாளர் மகளுக்கு எஸ்.பி பாராட்டு.!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2021 -2022ம் ஆண்டிற்கான குரூப் - 1 தேர்வில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் என்பவரது மகள் செல்வி. ஷீஜா மாநிலத்தில் 9வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

செல்வி. ஷீஜா வெள்ளிச்சந்தை அருணாச்சலம் மகளிர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து, தனது 24வது வயதில் குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று, விரைவில் துணை ஆட்சியராக பதவியேற்க உள்ளார். 

இவரது தந்தை ராஜாராம் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள குஞ்சன்விளை ஊரைச் சேர்ந்தவர் என்பதும், இவர் 1997ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று தற்போது தென்பாகம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி செல்வி. ஷீஜா அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் சால்வை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டினார்.  அப்போது காவல் ஆய்வாளரான அவரது தந்தை ராஜாராம்  உடனிருந்தார்.

Previous Post Next Post