தூத்துக்குடியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்.!


தூத்துக்குடி தமிழக அரசின் ஆணைக்கிணங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியில் 

ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தயாரிக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். லூர்த்தம்மாள்புரம், சாமுவேல்புரம், ஆகிய பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கிய பள்ளிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


பின்னர் டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வருகை தரும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறி பெற்றோர் மற்றும் ஆசிரியர் கல்வி மேலாண்மை குழுவினர்களுடன் கனிமொழி எம்.பி ஆட்சியர் செந்தில்ராஜ், சமூகநலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் கலந்துரையாடினார்கள்.


இதில் கனிமொழி எம்.பி பேசுகையில் தமிழகத்தில் முதன் முதலில் 1920ல் நீதி கட்சியின் போது சென்னையில் ஓரு பள்ளியில் தொடங்கப்பட்டது. பின்னர் காமராஜர் அதை விரிவுப்படுத்தினார். 1989ல் கலைஞர் ஆட்சியில் 5 முட்டையுடன் வழங்கப்பட்டது. 

தற்போது காலை உணவு திட்டம் உலகத்திற்கே வழிகாட்டும் உன்னதான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எல்லா துறையிலும் விளங்கி வருகிறது. காலை உணவு அருந்தும் குழந்தைகள் தேவைக்கேற்ப வாங்கி அதிலுள்ள காய்கறிகள் உள்பட அனைத்தையும் சாப்பிட வேண்டும். 

உங்கள் நலன் தான் முக்கியம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள இத்திட்டம் எதிர்கால தலைமுறையினருக்கு வாழ்வளிக்கும் திட்டமாகும். அனைத்து துறைகளும் முன்னேறி வரும் நிலையில் நாம் இனி போட்டி போட வேண்டியது உலக நாடுகள் மத்தியில் தான் வளர்ந்து விட்ட தமிழ்நாட்டை அனைவரும் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்கின்றனர் என்று பேசினார்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, வடக்கு மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்ட ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, 

நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ஹரிகணேஷ், தாசில்தார் செல்வகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் ரவிந்திரன், 

கவுன்சிலர்கள் சரவணக்குமார், கீதாமுருகேசன், கனகராஜ், அதிஷ்டமணி, மும்தாஜ், மகேஸ்வரி, ஜான்சிராணி, நாகேஸ்வரி, கண்ணன், ஜான், ராமகிருஷ்ணன், 

பள்ளி தலைமை ஆசிரியர் புளோரன்ஸ் நவநீதின், வட்டச்செயலாளர் செந்தில்குமார், கதிரேசன், பாலு, மகளிர் அணி அருணாதேவி, கவிதாதேவி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, 

மற்றும் கருணா, அல்பட், மணி, பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 66 பள்ளிகளில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அரசின் சாதனை விளக்க வாகனம் மூலம் பொதுமக்களுக்கு அரசின் திட்டம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

Previous Post Next Post