தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்-க்கு உற்சாக வரவேற்பு - காரில் இருந்து இறங்கி வந்து மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்வர்.!


அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். 

இன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும் பயணத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

முதலமைச்சர் வருகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பின்னர் கன்னியாகுமரி செல்வதற்கு காரில் சென்ற அவருக்கு வழி நடுவிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே மக்களோடு நின்றுகொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரிடம் காரிலிருந்து இறங்கி நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். 


நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ், அமைச்சர் ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கே என் நேரு, எம்.எல்.ஏ-க்கள் மார்கண்டேயன், சண்முகையா, அப்துல் வகாப்,  மேயர்கள் தூத்துக்குடி ஜெகன்பெரியசாமி, நெல்லை சரவணன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், துணையர் மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அண்ணலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாணவர் அணி துணை செயலாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயசீலன், ஜெயதுரை, விஜிலா சத்தியானந், மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன் சிவபத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் வரவேற்றனர். 

நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர்கள் அருணாச்சலம், செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகப்பெருமாள், செந்தூர்மணி, 

மாவட்ட அணி செயலாளர்கள் அந்தோணி ஸ்டாலின் கஸ்தூரி தங்கம் உமா தேவி அன்பழகன், மரியதாஸ், ராமஜெயம், வீரபாகு, ஆஸ்கர், ரவி என்ற பொன்பாண்டி மாவட்ட அணி துணை செயலாளர்கள் அந்தோணி கண்ணன், அருணா தேவி, கணேசன், ராமர், வக்கீல் நாகராஜன் பாபு, ரகுராமன், 

ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், சுப்பிரமணியன், காசிவிஸ்வாநதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், சின்னப்பாண்டியன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், மாநகர துணை செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, 

மாநகர அணி செயலாளர்கள் அருண்குமார் முருக இசக்கி, தேவதாஸ், ஜெயக்கனி, பிரபு, துணை செயலாளர்கள் பால்ராஜ், டைகர் வினோத், ஆர்தர் மச்சாது, அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், 

மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், நாராயணன், சக்திவேல், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், இசக்கிராஜா, ஜான்சிராணி, ரெக்ஸ்லின், பவாணி மார்சல், தெய்வேந்திரன், ஜெயசீலி, ரிக்டா, ராஜேந்திரன், 

ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், தூத்துக்குடி மாநகர வட்ட செயலாளர்கள் சுப்பையா, கதிரேசன், டென்சிங், ரவீந்திரன், சேகர், கருப்பசாமி, கீதா செல்வமாரியப்பன், ராஜாமணி, கங்காராஜேஷ், சதீஷ்குமார், செல்வராஜ், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சிவக்குமார், 

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா தங்கமாரிமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், பொருளாளர் ஆனந்தகுமார், வடக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சத்யா, ரேவதி, பிரித்தா, லெட்சுமி, முருகேஸ்வரி, ஜெபராணி, சந்திரா, சாமூஜெரினா, செல்வி, கன்னியமரியாள், கவிதா, ஜெயசீலி, பார்வதி, சித்தா, மல்லிகா, தாமரை, பாப்பாத்தி, பெல்லா, நிர்வாகிகள் கருணா, மணி, ஜீவன் ஜேகப், உலகநாதன், அல்பர்ட், பிராபகர், லிங்கராஜா, ஜோஸ்கர், பெலிக்டக்ஸ் உள்பட பலர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Previous Post Next Post