ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு மருத்துவ கண்காட்சி, பேரணி... எம்.எல்.ஏ., க.செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், காவல் ஆணையர் பிரபாகரன் பங்கேற்பு

 


அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு, கோவை மண்டலம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் ஏங்கர் மற்றும் நிட்சிட்டி குமரன் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மற்றும் என்.எஸ்.எஸ்.,  மாணவர்கள் சார்பில், 7வது சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி,  திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் நடைபெற்றது.

முதல் நாள் விழிப்புர்ணர்வு பேரணியை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்  தலைமை வகித்து கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் 500க்கும் மேற்பட்ட குமரன் கல்லூரி- நுண்ணுயிரியல் துறை, ஈரோடு நந்தா மற்றும் கோவை ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர், மனிதிவேதம் இவர்களுக்கு விழிப்புணர்வு பனியன்களை இலவசமாக கொடுத்தனர். கல்லூரியில் தொடங்கிய பேரணி பெரியாண்டிபாளையம் சோதனை சாவடி ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், பாரதி நகர், நால் ரோடு வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர் . பழசாறு மற்றும் பிஸ்கட் கொடுத்து பேரணியை  பாஸ்கரன் முடித்து வைத்தார்.
இரண்டாம் நாள் கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்ஸி பிலிப் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக கன்யாகுமரி சாரதா மருத்துவமனை டாக்டர் மகாதேவன், 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, லைன்ஸ் கிளப் ஆங்கர் தலைவர் நாராயணன், லயன்ஸ் கிளப் நிட் சிட்டி தலைவர் ஜான் பிரிட்டோ, குமரன் மகளிர் கல்லுாரி நிர்வாக அதிகாரி நிர்மல்ராஜ் பங்கேற்றனர், அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு கோவை மண்டல தலைவர் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் டாக்டர் முரளிராமிற்கு பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதும், டாக்டர் சத்தியமூர்த்திக்கு ஆர்யாவைத்தியன் மாதவன் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ஈரோடு நந்தா மற்றும் கோவை ஆயுர்வேத கல்லூரி மாணவர்களுக்கு முதல் இரண்டிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து நடந்த இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  
ஆயுர்வேத மருத்துவ கண்காட்சியில் ஆர்யா வைத்திய பார்மசி, பையோட்டிக்ஸ், ட்ரிகாக், ஆயுர்வேதிக் மார்ட், மரு ஹேமாசுபாஷினியின் மனிதிவேதம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்கள் பங்கேற்றனர், ஈரோடு நந்தா மற்றும் கோவை ஆயுர்வேத கல்லூரிகள் ஆயுர்வேத மாதிரிகளை காட்சி படுத்தினர்.
Previous Post Next Post