லாரி மோதியதில் தலை நசுங்கி ஒருவர் பலி.! - தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சோகம்.!

 

தூத்துக்குடி அருகே கீழகூட்டுடன்காடு கிராமம், அய்யனார் காலனி  பகுதியை சேர்ந்தவர் செல்வலிங்கம் 32, த/பெ சுயம்பு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது, ,  சீனிவாசா மர யார்டுல் வேலை செய்யும் இவர் இன்று இரவு சுமார் 8 மணியளவில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post