மாப்பிள்ளையூரணியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: "பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்" - சண்முகையா எம்எல்ஏ பேச்சு

 

தூத்துக்குடி :தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துரித 24 மணிநேர மின்சார சேவைக்கு மின்நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டு அதில் நுகர்வோர்கள் குறைகளை கேட்டறியும் கூட்டம் மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் மஹாலில் வைத்து நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்உற்பத்தி கழக ஊரகம் ஆக்கமுகவர் நெப்போலியன் நார்பட், மின்பாதைய ஆய்வாளர்கள் ரெங்கதுரை, அண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக இலக்கிய அணி மகாராஜன், மாணவரணி சரவண பெருமாள், பகுதி செயலாளர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

பின்னர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில்...முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கனிமொழி எம்பி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைபடி மின்நுகர்வோர்கள் குறைதீர்ப்பு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்று ஒவ்வொரு பகுதியாக சென்று கருத்து கேட்டது இல்லை. மின்வாரியத்தில் எந்த குறைபாடுகளாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கவனமுடன் செயல்படுகிறார். நுகர்வோர் நலன் தான் முக்கியம் என்று கருதி முதலமைச்சரும் செயல்படுகிறார். 

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனுவாக அளித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த பகுதியில் கடந்த ஆட்சியில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளன. 100 மின் கம்பங்களை மாற்றிக் கொடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் காமராஜர்புரம், பாரதிநகர், ஆ.சண்முகபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளது. அதை சரிசெய்து கொடுக்க வேண்டும். இந்த பகுதியில் ஒடை மரம், கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன. அதனாலும் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அதை முழுமையாக ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும்பட்சத்தில் மின்சார குறைகளும் தீரும் நிலை உள்ளது. 

கருப்பசாமிநகர், சமர்வியாஸ்நகர்  பகுதிகளில் 11 மின்கம்பங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையின் ரோட்டில் உள்ளன. அதை சாலையின் ஓரமாக அமைத்து பொதுமக்கள் வாகனங்கள் வந்து செல்வதற்கு வசதியாக அதை மாற்றிக் கொடுக்க வேண்டும். அதே போல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின் குறைபாடுகள் உள்ளதையும் சரிசெய்து கொடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது மின்வாரியத்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்க வேண்டும். 

உதவி மின்பொறியாளர்கள் (ஊரகம்) முருகபெருமாள், உதவி செயற்பொறியாளர் (நகர்) பிரேம், செயற்பொறியாளர் (நகர்) ராம்குமார், தெற்குமாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ் பாலன், ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதி ராஜா, தங்கமாரிமுத்து மற்றும் ராஜ், வேல்ராஜ், மாரியப்பன், ராஜா, சேசு, கௌதம், உதவி கணக்கு அலுவலர், மதிப்பீட்டு அலுவலர் உட்பட நுகர்வோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post