குற்ற வழக்குகளில் தொடர்பு - வழக்கறிஞர்கள் 9 பேர் தொழில் செய்ய பார்கவுன்சில் தடை.!

 

இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது..

தனது கட்சிக்காரரிடம் பணம் கையாடல் செய்த வழக்கறிஞர் நந்தகோபா லன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருச்சி வழக்கறிஞர் பிரபு, தீவிர குற்றச்சாட்டின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான நாகர்கோவில் வழக்கறிஞர் ராஜகணபதி ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 79 லட் சம் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலையில் போலி பணி நியமன உத்த ரவு வழங்கியதாக செய்த தாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடலூர் வழக்கறிஞர் பெருமாள், உயர் நீதிமன் றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 6 லட்சம் வாங்கி மோசடி செய்த தாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னை வழக்கறிஞர்கள் ரமேஷ், பொன் பாண்டி யன், திருவாரூர் நீதிமன் றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய முத்தாட்சி ஆகியோருக் கும் வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது. போக்சோ வழக்கில் தொடர்புடைய சென்னை வழக்கறிஞர் ரோஜா ராம்குமார் மற் றும் மதுரை வழக்கறிஞர் அருண்பாண்டியன் ஆகி யோர் வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதிக்ப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post