பஸ் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு - எஸ்யூவி கார் மீது மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.!

 

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பேருந்தும் SUV காரும் மோதிய பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பிரமுக் சுவாமி மஹராஜ் சதாப்தி மஹோத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய தனியார் பேருந்து நவ்சாரி தேசிய நெடுஞ்சாலை எண் 48ல், வந்து கொண்டிருந்த போது, டிரைவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மீது மோதியதில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பயணம் செய்த அனைவரும் (9பேர்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். 11 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எதிர் திசையில் இருந்து எஸ்யூவி வந்து கொண்டிருந்த போது, ​​வெஸ்மா கிராமத்திற்கு அருகே விபத்து நேர்ந்ததாக நவ்சாரி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ருஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்தார்.

எஸ்யூவியில் பயணித்தவர்கள் குஜராத்தில் உள்ள அங்கலேஷ்வரில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் வல்சாத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும், பேருந்தில் பயணம் செய்தவர்கள் வல்சாத்தை சேர்ந்தவர்கள் என்றும் உபாத்யாய் கூறினார்.

விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பதிவில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"குஜராத் மாநிலம் நவ்சாரியில் நடந்த சாலை விபத்து மனவேதனை அளிக்கிறது. இந்த துயரத்தில் குடும்பத்தை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். வலி தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உடனடி சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறது. ," என்று அவர் குஜராத்தியில் ட்வீட் செய்துள்ளார்.

இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, அதன் பிறகு போலீசார் கிரேன் மூலம் பேருந்தை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post