"எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" - செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்.. அதிக அளவில் இளைஞர்கள் புதிய உறுப்பினர்கள் மகளிர்கள் சேர்க்க வேண்டும் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எனக்கு தெரிவிக்க வேண்டும் அதற்கு தகுந்தாற்போல் அந்த பகுதியில் நாம் கூட்டம் போட்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். புதியவர்களையும் இணைத்து அவர்களையும் அரவணைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். எதிர்வரும் தேர்தலில் முழு வெற்றியை நாம் பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் திமுக கழகம் தொடங்க காரணமாக இருந்த ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகவும் பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பராகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த அண்ணனாகவும் விளங்கியவர் இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டி எங்கும் சுயமரியாதை கொள்கைகளை எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்து கழகத்தை வளர்த்த மூத்த முன்னோடியில் ஒருவராக விளங்கியவர் தன்னுடைய இறுதி காலம் வரை கழகத்திற்கு எத்தனை சோதனை வந்த நேரத்திலும் தடம் மாறாமல் கலைஞருடன் பயணித்தவர். கழகம் ஆட்சி பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் அமைச்சராக பொறுப்பேற்று திறமையாக செயல்பட்டவரும் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த இனமான போராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள் வருகிற டிசம்பர் 19அன்று வருகிறது. அன்றைய தினத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடி வேண்டும். என்ற திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி பேருர் மற்றும் வார்டு கிளைக்கழகங்கள் தோறும் பேராசிரியர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்திட அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தலைமை கழகம் அறிவிப்புக்கிணங்க தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தீவிரபடுத்தி தலைமை கழகம் அறிவித்தப்படி அப்பகுதியை நன்கு அறிந்திருந்தவர்கள் கழப்பணியாற்றுபவர்களாகவும் இருந்திட வேண்டும். என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க இளைஞர் அணி மகளிர் அணி தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளடக்கியவர்களை நியமிப்பது மாநகரம் ஒன்றிய பகுதி நகர பேரூர் செயலாளர்கள் சுணக்கம் காட்டாமல் உடனடியாக பூத் கமிட்டி அமைத்து அந்த பட்டியலை மாவட்ட கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் 100 தெரு முனை கூட்டங்கள் நடத்துவது பேச்சாளர் விபரம் பின்னா தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, தலைமை கழக பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணிஅமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள், மாவட்ட கவுன்சிலர்கள் ஞானகுருசாமி, தங்கமாரியம்மாள், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின் அருண்சுந்தர், பகுதி இளைஞர் அணி ரவி, மற்றும் கருணா, அல்பட், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post