மின்சார திருத்த மசோதாவை அனைத்து மக்களும் ஏன் எதிர்க்க வேண்டும்?

 

மின்சாரத்தை தனியார்மயமாக்குவதால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநில அரசுகள் வழங்கி வரும் மின்சாரத்திற்கான பல மானியங்கள் மற்றும் இலவச மின்சாரம் பாதிக்கப்படுகின்றன. 

ஒன்றிய பிஜேபி அரசு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத் தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மின்சார சட்ட திருத்த மசோதா 2022-ஐ மக்களவையில் தாக்கல் செய்தார். 2003ஆம் ஆண்டு மின்சார சட்டத்தை திருத்தம் கொண்ட வர இந்த புதிய மின்சாரச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், மின்சாரப் பயன்பாடு, மின்சா ரத்துறையின் வளர்ச்சி தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கும். மின்துறையை சீர்திருத்துவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சட்ட  மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நாடு முழுவ தும் உள்ள விவசாயிகள், மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மின்நுகர்வோர் கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

மின்விநியோகம்

மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு மின்சா ரம் வழங்குவதை தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கும் வகையில் மின்சார சட்டத்தின் 42 மற்றும் 14ஆவது பிரிவுகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தப் படி மின்சார விநியோகத்தில் போட்டியை ஏற்படுத்து வதன் மூலம் தொலைபேசி, அல்லது இணைய சேவை  வழங்குபவர்களை தேர்ந்தெடுப்பது போல் மின்சா ரம் வழங்குபவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை  மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களு க்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சட்டம் 42ஆவது பிரிவின் திருத்தப்படி மின்சார விநியோகம் செய்யும் நிறுவனம் மின்சாரம் வழங்குவதற்காக அங்குள்ள மின் கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நிறுவனத்தின் மின்கட்டமைப்பை வேறொரு நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனங்கள் வீலிங் கட்டணம் (Wheeling Charges) எனும் கட்டணத்தை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என அப்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு இத்தனை ஆண்டுகாலமாக உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பை எப்படி தனியாருக்கு கொடுப்பது என்றும், தனியார் நிறுவனங்கள் அதற்காக அளிக்கும் கட்டணங்கள் குறைவாகவும், கட்டணத்தை ஏமாற்று வதற்கும் வாய்ப்புள்ளது என்றும் மாநில அரசுகள் ஆட்சேபனை தெரிவிக்கின்றன. 

இலவச மின்சாரம்

தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, மத்தி யப் பிரதேசம் உள்ளிட்ட 27 மாநிலங்களில் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங் கப்பட்டு வருகிறது. தற்போதைய சட்டத்திருத்த மசோ தாவில் இலவச மின்சாரம் தடை செய்யப்படுவதாக நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மின்சாரத்திற்கு உரிய கட்டணம் வசூ லிப்பதை வலியுறுத்தி உள்ளது. பிரிவு 62இன் திருத் தத்தின் படி மின்சாரத்திற்கு அதிகபட்ச கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானிக்கும். அதே  போல் தனியார் மின்விநியோக நிறுவனங்களுக்கு இடையே போட்டியை உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச கட்ட ணத்தையும் ஒழுங்குமுறை ஆணையமே தீர்மானம் செய்யும். இதில் அதை விட குறைந்த விலையில் மாநில அரசு நிறுவனத்தால் மின்சாரத்தை தர முடியா மல் போகும் நிலையும் உருவாகும். 

மானியம்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சாரச் சட்டத் திருத்தப்படி தனியாரும் மின்விநியோகத்தில் பங்கெ டுக்கலாம் என்பதால் ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உரிமம் தரும் போது மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்குபவர்களிட மிருந்து பெறும் தொகையை வேறு பிரிவினருக்கு மானியமாக தருவதற்கு ஏதுவாக ஒரு நிதியை அரசு உருவாக்க வேண்டும் என்று இந்த திருத்தச் சட்ட மசோதா பிரிவு 60 வலியுறுத்துகிறது. தனியார் நிறுவனங்கள் மின்விநியோகத்தில் லாபம் தரக்கூடிய பெருநகரங்கள், நகரப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் விநியோகத்தில் ஈடுபடும். அந்த லாபம் முழுவதும் அவர்களையே சென்று சேரும், கிராமங்கள், விவசாயப் பகுதிகளுக்கு மின்விநியோ கத்தை அரசே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். லாபம் தரக்கூடிய பகுதிகள் தனியாருக்கு சென்று விட்டால் குறுக்குமானியம் (Cross subsidy) மூலம் பிற பிரிவினருக்கு சலுகைகளைத் தர முடியாது.

தொழிற்சாலைகளிலிருந்து பெறப்பட்ட குறுக்கு மானிய தொகை முழுவதும் தனியார் மின்விநியோக நிறுவனங்களுக்கு போய்ச் சேரும். இதனால், மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஏற்கனவே, மாநில அரசுகள் இந்த குறுக்கு மானியத்தை  இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளுக்கு பயன்படுத்தி வந்தன. இந்த சட்டதிருத்தம் பிரிவு 60இன் படி இனி மேல் அரசே நிதியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் இலவச மின்சாரத்திற்கு நிதியை பயன்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளது.  மாநில அரசுகளுக்கு கிடைத்து வந்த குறுக்கு மானி யத்தொகை இனிமேல் கிடைக்காத போது மக்களுக்கு, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பது மாநில அரசு உருவாக்கும் நிதி மூலம் வழங்க முன்வருமா என்ற கேள்வி எழுகிறது. 

விவசாயம் பாதிப்பு

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சாரச் சட்டத்திருத்த மசோதா 2022இல் அதிகம் பாதிக்கப் படுவது விவசாயத்துறை தான். விவசாயிகளின் நிதி ஸ்திரத்தன்மையையும், நாட்டின் உணவுப் பாது காப்பையும் சட்டம் உறுதி செய்ய வேண்டாமா? உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு உணவு உற்பத்தி க்கு அதிக முன்னுரிமை கொடுக்காமல் இருக்க முடியுமா?  ஹரியானா மாநிலத்தில் 2014-15 நிதியாண்டில் நிலத்தடி நீரில் 72 சதவீதம் மின்பம்ப்செட் மூலம் எடுக்கப் பட்டது மற்றும் விவசாயத்திற்கான மொத்த மானி யத்தில் 46 சதவீதம் மின்சாரத்திற்காக வழங்கப்பட்டுள் ளது. தானியப்பயிர்களை வளர்க்க மின்சாரம் மூலம் பம்ப் செய்யப்படும் தண்ணீர் தேவைப்படுகிறது. மானியம் ரத்தானால் அது குறைந்துவிடும்.  2002-2017 காலத்தில் அதாவது 15 ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலம் மத்திய தொகுப்பிற்கு 290 மில்லி யன் டன் நெல் மற்றும் கோதுமையை அளித்தது. 450 டிரில்லியன் லிட்டர் பாசனத் தண்ணீரை உற்பத்தி செய்ய பயன்படுத்தியது. இதற்கு 25000 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய மின்மானியம் தேவைப்பட்டது. அதற்கு ஈடாக ஒன்றிய அரசிடமிருந்து பஞ்சாப் மாநி லத்திற்கு எந்த மானியமும் கிடைக்கவில்லை. 

பொது விநியோக முறை மற்றும் பிற மத்தியத் துறை திட்டங்களுக்காக ஒன்றிய அரசு பஞ்சாபிலி ருந்து கொள்முதல் செய்யும் தானியங்களுக்கு மானி யம் கொடுக்க வேண்டாமா? மின்சாரத்திற்கு மானியம் கொடுத்தால் தானே இது போல் தானியங்கள் கொள் முதல் செய்ய முடியும்.  ரஷ்யா - உக்ரைன் போரைத் தொடர்ந்து விதிக்கப் பட்ட பொருளாதாரத் தடைகளால் ஐரோப்பிய நாடுக ளில் மின்சாரச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தாலியில் இந்தாண்டு அக்டோபர் மாதத்திற்கு முந்தைய ஒரு வருடத்தில் மின்சாரக் கட்டணம் 350 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 250 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அரசாங்கங்கள் நுகர்வோருக்கு ஆதரவாக பெரும் மானியங்களை வழங்குகின்றன. நுகர்வோர் நலனில் மோடி அரசு ஏன் அக்கறை காட்டவில்லை? மக்களுக்கு மின்சாரத்தைக் கூட மறுக்க இந்த மசோதா வழி கோலுகிறது. 

முழுத் தோல்வி...

மின்விநியோகத்தை தனியார்மயமாக்கிய அனுப வம் இதுவரை முழு தோல்வியாகவே உள்ளது. பீகார் மாநிலத்தில் கயா, சமஸ்திபூர் மற்றும் பாகல்பூர், உத்த ரப்பிரதேசத்தில்  கான்பூர், குவாலியர், சாகர் மற்றும் உஜ்ஜைன், மகாராஷ்டிராவின் அவுரங்கபாத், ஜல்கான், ஜார்க்கண்டில் ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களில் தனியார்மயமாக்க முயற்சி செய்யப்பட்ட அனைத்து நகரங்களிலும் ஒழுங்குமுறை ஆணை யங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன.  மின்சாரத்தை தனியார்மயமாக்குவதால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநில  அரசுகள் வழங்கி வரும் மின்சாரத்திற்கான பல மானி யங்கள் மற்றும் இலவச மின்சாரம் பாதிக்கப்படுகின் றன. இதனால் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் விவ சாயத்தில் தானியம் மற்றும் காய்கறி, பூ, பழ உற்பத்தி கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் மின்சார வாரியங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் தாண்டி மோடி அரசு கார்ப்ப ரேட் நிறுவனங்களை பாதுகாக்கவும் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் மின்சாரத்தை தனி யார்மயமாக்க இந்த மின்சார சட்ட திருத்த மசோதா 2022-ஐ கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் தெரிவித்ததற்கு மாறாக இப்போது மோடி அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள் ளது. தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருக்கக் கூடிய சட்டம் கருநாகம் சீறுவதைப் போல எப்பொழுது வேண்டுமானாலும் சீறலாம். எனவே, இச்சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் விவ சாயிகளையும், நுகர்வோரையும் திரட்டி மிக வலு வான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2022-ஐ தூக்கி எறிவோம்!.

கட்டுரையாளர் : கே.பி.பெருமாள்.

மாநில பொருளாளர், 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post