ஓய்வு பெற்ற ரயில்வே உயர் அதிகாரி வீட்டில் 17 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.57 கோடி ரொக்கம் பறிமுதல் - சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ நடவடிக்கை.!

 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி பிரமோத் குமார் ஜெனா வீட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சுமார் ரூ.1.57 கோடி ரொக்கம் மற்றும் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  அவர் கடந்த நவம்பர் 2022 இல் ரயில்வேயில் முதன்மை தலைமை வணிக மேலாளராக ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1987 பேட்ச் இந்தியன் ரயில்வே ட்ராஃபிக் சர்வீஸ் (IRTS) அதிகாரியான பிரமோத் குமார் ஜெனாவிடம் இருந்து மேலும் சுமார் 2.5 கோடி ரூபாய் வரையிலான வங்கி மற்றும் தபால் டெபாசிட்கள் மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post