தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவராக அட்வகேட் சுபாசினி வில்சன் பதவியேற்பு.!

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ்    2 வது ஆண்டுக்கான புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அட்வகேட்  சுபாசினி வில்சன் பதவியேற்பு விழா தூத்துக்குடி டிஎஸ்எப் கிராண்டு பிளசாவில் நேற்று நடைபெற்றது. 

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. செனேடர் .டி. செந்தில் கண்ணன் தலைமை வகித்தார். மற்றும் ஜேசிஐ செனேடர். என்.கார்த்திக், மண்டல தலைவர் மண்டலம் 18  கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார். 

மண்டல துணைத் தலைவர் ஜே.எப்.எம். ஆர். அன்பு தனபாலன் மற்றும் ஜேசிஐ செனேடர்.ஜே. வலன் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

மண்டல அலுவலர்கள் ஜேசிஐ. PPP. சி.வில்சன் அமிர்தராஜ், ஆர்.ஸ்ரீதரன், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.  இந்த ஆண்டு தலைவர் ஜேசி.ஹச் .ஜி. எப். டி. ஜெர்லின்  தினகரனும் அடுத்த ஆண்டு தலைவராக  பதவியேற்க உள்ள ஜே.எப்.எம். அட்வகேட்  வி.சுபாசினி வில்சன் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

பின்னர் புதிய தலைவர் தலைவர் பதவிக்கான ஏற்புரையை வழங்கினார். இந்த ஆண்டின் கருப்பொருளாக "குழந்தையை காப்பாற்றுவது"  என்று தேர்வு செய்யப்பட்டது. மற்றும் பத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும்  தூத்துக்குடியில் உள்ள ஆசிரமத்திற்கு 25 கிலோ அரிசி "அண்ணபுர்னா" என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

 செயலாளர் ஜேசி. ஹச். ஜி. எப். அ. ஆயிஷா இப்ராஹிம்  நன்றியுரை வழங்கினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post