ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டு 200 மில்லியன் பயனர்களின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு - இஸ்ரேல் நிறுவனம் அதிர்ச்சி தகவல்.!!

நீங்கள் ட்விட்டர் பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில், உங்கள் மின்னஞ்சல் முகவரி, பெயர், பயனர் வரலாறு மற்றும் உங்கள் ஃபோன் எண் டார்க் வெப்பில் இருக்க வாய்ப்புள்ளது. 200 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் கசிந்து டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளதாக ட்விட்டர் சிக்கலான சூழலை எதிர்கொண்டுள்ளது.

டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் 20 கோடி பேரின் இமெயில் முகவரியை ஹேக்கர்கள் திருடி உள்ளனர். டிவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பிரச்னை மேல் பிரச்னை எழுந்து வருகிறது. தற்போது டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலிய நாட்டின் சைபர் பாதுகாப்பு  நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கால் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.  இதன் மூலம் 20 கோடிக்கும் அதிகமான டிவிட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை ஹேக்கர்கள் திருடி அவற்றை ஆன்லைனில் பதிவிட்டுள்ளனர்.

ஹேக்கிங் தொடர்பான முதல் தகவல் கடந்த மாதம் டிச. 24 அன்று சமூக ஊடகங்களில் வெளியானது. ஆனாலும் இதுபற்றி இப்போது வரை டிவிட்டர் தரப்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. வழக்கமாக கருத்து தெரிவிக்கும் எலான் மஸ்கும் இதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை. இணைய தளத்தில் வெளியான தகவல்கள் உண்மையானதா, போலியா என்பதை பற்றி ஆராய்ச்சி நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹேக்கிங் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பு 2021ம் ஆண்டிலேயே நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஹேக்கர் அல்லது ஹேக்கர்களின் அடையாளம் அல்லது இருப்பிடம் குறித்து எந்த தடயமும் இல்லை. இது 2021 ஆம் ஆண்டிலேயே நடந்திருக்கலாம், இது கடந்த ஆண்டு எலோன் மஸ்க் நிறுவனத்தின் உரிமையைப் பெறுவதற்கு முன்பு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து ட்விட்டர் இன்னும் பதிலளிக்கவில்லை என்றாலும், இஸ்ரேலிய இணைய பாதுகாப்பு-கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கால், இந்த மீறல் ஹேக்கிங், டாக்ஸிங் மற்றும் இலக்கு ஃபிஷிங் போன்ற பல இணைய குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார். இது இதுவரை கண்டிராத "மிக முக்கியமான தகவல் கசிவுகளில் ஒன்று" என்று கூறியுள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post