தூத்துக்குடி : ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா - அமைச்சர்கள்,எம்.பி பங்கேற்பு.!

தூத்துக்குடி தமிழ் சாலை எம்.ஜி.ஆர். பூங்காவில் ரூ.77 இலட்சம் மதிப்பில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து  மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

பணிகளை துவக்கி வைத்து பேசிய அவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரத்தந்தை என போற்றப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு ரூ.77லட்சத்து 87ஆயிரத்து 343 மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவிற்கு கீழ்ப்புறம் 376.60 சதுர அடி பரப்பில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏபிசிவி. சண்முகம், மாநில மீனவரணி துணை செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், வடக்கு மாவட்ட அவை தலைவர் செல்வராஜ். மாவட்ட மீன வரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், வர்த்தக அணி வக்கில் கிறிஸ்டோபர் விஜயராஜ், மருத்துவ அணி அருண் குமார். தொண்டரணி முருகஇசக்கி, சிறுபான்மை அணி ஜீவன்ஜேக்கப், மக ளிரணி கஸ்தூரிதங்கம். மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், பாலகுருசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ரிக்டா, வைதேகி, பவானிமார்ஷெல், செபஸ் டின்சுதா, விஜயலெட்சுமி, முத்துமாரி, மும்தாஜ், ஜெயசீலி, ரெக்சிலின், கந்தசாமி, விஜயகுமார். சந்திரபோஸ், ராமுஅம் மாள் வட்ட செயலா ளர்கள் டென்சிங், பாலு, கங்காராஜேஷ், மாநகர மாணவரணி சோமநாதன், மாவட்ட கூட்டுறவு  பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், குரூஸ்பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் ஹில்ட், பரதர் நலசங்க தலைவர் ரொனால்ட் வில்லவராயர். சமூக ஆர்வலர் பாத்திமாபாபு, நாட்டுப்படகு பைபர் படகு நலச்சங்க தலைவர் கயாஸ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தம்பிரான்தோழன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post