தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை - சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி.!

 

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

திங்கள், வியாழன் என வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 

மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளைப்  பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, சுருக்குமடி வலைகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மீனவர்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் 12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என தெரிவித்துள்ளது.

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழ்நாடு அரசின் ஆணைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post