ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூடுதல் ஆட்சியரின் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இரவு நேர ஆய்வு கூட்டம் மற்றும் விடுமுறை நாள் கள ஆய்வு ஆகியவற்றை கூடுதல் ஆட்சியர் கைவிட வேண்டும், 

பயனாளிகள் சார்ந்த திட்டங்கள் தொடர்பாக ஊழியர்கள் மீது தேவை இன்றி பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதியின் கீழான குற்றச்சாட்டுகள் மீது ஊழியர்கள் நலனுக்கு எவ்வித குந்தகமும் இன்றி இறுதி உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்துதல், 

அனைத்து வட்டாரத்திலும் காலி பணியிடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் வட்டார பணிகளை முடக்கும் விதமாகவும் வட்டார ஊழியர்களை மாவட்ட அலுவலகங்களில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்தி வரும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்,

ஊழியர்கள் தங்களது பணியினை திறன் செய்ய வாய்ப்பு அளிக்காமல் தினந்தோறும் காணொளி ஆய்வு கூட்டம் என்ற மாவட்ட அலுவலர்களின் நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும், 

ஏற்கனவே பலவேறு முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றாத தொலைதூரம் சென்று பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் அருகாமை வட்டாரங்களில் பணி மாறுதல் வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளான ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post