JCI Pearlcity QueenBees சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின பேரணி - 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு.!

 

தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின பேரணி நடைபெற்றது.

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் இருந்து 200 மாணவிகளுடன் தொடங்கிய பேரணி, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை காப்பது, ஒரு தலைமுறையை காப்பது ஆகும் போன்ற கோஷங்களுடன் குருஸ் பர்னாந்து சிலை அருகில் முடிவடைந்தது. 

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் Rev. Sis.  ரூபா சிறப்பு அழைப்பாளராக பேரணியில் கலந்து கொண்டார். JCI Pearlcity QueenBees இன் தலைவர் JFM வழக்கறிஞர் வி. சுபாசினி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் எப்படி துஷ்பிரயோகத்தை தடுக்கலாம் என்பது பற்றி விரிவுரை வழங்கினார். மற்றும் அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சியை செயலாளர் Jc HGF. அ. ஆயிஷா இப்ராஹிம் மற்றும் துணைத் தலைவர் Jc டி. சுதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

இதில் பியர்ல் சிட்டி குயின் பீஸ் பட்டயத் தலைவர் Jc HGF  டி.ஜெர்லின் தினகரனும் கலந்து கொண்டார். மேலும், துணைத் தலைவர் பயிற்சி JFM R. அஜிதா பிரபு, துணைத் தலைவர் மேலாண்மை Jc HGF A. மதுமிதா, துணைத் தலைவர் வர்த்தக Jc கிரேஸ் மற்றும் இயக்குநர்கள் Jc அ. பயஸ் ஷபிர், Jc அ. டிஸ்னி அன்டனி, Jc முபாராஷா  மற்றும் பல உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

ஹோலி கிராஸ் ஹோம் கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர் மதுரவள்ளி, பேராசிரியை கிருஷ்ணவேணி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தனர்.

ஜேசிஐ பேர்ல்சிட்டி தலைவர் ஜேசி ஏ ராஜேஷ், மண்டல அதிகாரி ஜேசிஐ செனட்டர் ஆர்.ஸ்ரீதரன், மண்டல எஸ்எம்ஏ ஒருங்கிணைப்பாளர் ஜேசிஐ.  செனட்டர் முத்துராமன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாராட்டினர். 

ஜேசிஐ பேர்ல்சிட்டி  பொன்ராஜா மற்றும் பாலகிருஷ்ணன் மாணவிகள் பேரணியில் பங்கு பெற உதவி புரிந்தனர். நூற்றுக்கணக்கான பொது மக்கள் இதில் இடம் பெற்றுனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post