கிருஷ்ணகிரியில் வன்முறையாக மாறிய போராட்டம்... கல்வீச்சு, தடியடி, கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு... வீடியோ ஆதாரத்தை வைத்து கைது செய்வோம் என எஸ்.பி., தகவல்

 கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கூட்டத்தை கலைத்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி,  சூளகிரி, ஓசூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் விழாவையொட்டி எருதுவிடும் விழா ஆண்டுதோறும்  நடத்தப்பட்டு வருவது வழக்கம், 

 இந்த ஆண்டும் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் எருதுவிடும் விழா நடைப்பெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் நடந்த எருதுவிடும் விழாவில் மூன்று பேர் மாடு முட்டி உயிரிழந்தனர். அதே போல் தருமபுரியில் நடந்த எருதுவிடும் நிகழ்வில் மாடுமுட்டி பள்ளி சிறுவன் உயிரிழந்தான். இதனால் எருதுவிடும் நிகழ்வில் உரிய பாதுபாப்பு இல்லாமல் நடத்துப்படுவதாக கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் எருதுவிட மாவட்டநிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. 

 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசமுத்திரத்தில் நடக்கும் திருவிழாவில் மாடுவிட ஊர்பொதுமக்கள் அனுமதி கேட்டிருந்தனர். 

துறை அலுவலர்கள் பாதுகாப்பு வழிமுறை குறித்து ஆய்வு செய்ய இருந்த நிலையில். எருதுவிட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என கூறி  பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இன்று காலை சூளகிரியில் உள்ள பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்  ஏராளமான இளைஞர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்களை சிறைப்பிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதனை அறிந்த மற்ற சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தாங்கள் வளர்க்கும் காளைகளுடன் சாலை மறியல் செய்யும் இடத்திற்கு ஆதரவு தெரிவித்து திரண்டனர். 

 அப்பகுதில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.  இதனால் அப்பகுதில் இருபுறமும் சுமார் ஆறு கிலோ மீட்டார் வரை வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்று இருந்தது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதானால் அங்கு நூற்றுக்கும் மோற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

 மேலும் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ள  போராட்டக்காரர்களிடம் மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள்  அதிகாரிகள் பேச்சுவார்த்தை செய்துவருகின்றனர். இதனை மீறி தொடர்ந்து சாலை மறியல் நடந்தது. பின்னர் அங்கிருந்த போராட்க்காரர்கள் 10 க்கும் மேற்பட்ட பேருந்து மற்றும் ஜீப் கண்ணாடிகளை உடைத்தும் போலீசார் மீது கல்வீசினர் இதில் 5 க்கு மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசி போராட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போராட்டக் காரர்கள் திரண்டு போலீசார் மீதும் கற்களை வீசி தாக்கினார்கள். 

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, போலிசார் தடுத்ததால் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர் போலிசார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் போலிசார் வேறு வழியின்றி தடுக்க முடியாமல் திணறினர்..

பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் கற்களை குவித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்..

கலவரகாரர்களை வெளியேற்ற அதிவிரைவு படையுடன் வந்த போலிசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 

அதி விரைவு படையினரின் நடவடிக்கையால் சில மணி நேரங்களுக்கு பின்னர் போக்குவரத்து சேவை தொடங்கியது. 200 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசார் சிலருக்கு மண்டை உடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் சிலர் காயமடைந்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் கூறுகையில், ‘ அனுமதி இல்லாமல் எருது விடும் விழா நடத்த முயன்றதே போலீசார் தலையிட வேண்டியது ஏற்ப்பட்டது. கல்வீச்சில் போலீசார் சிலர் காயமடைந்து உள்ளனர். வீடியோ ஆதாரத்தை வைத்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை, அ.திமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

- சக்திவேல்

Previous Post Next Post