பல்லடம் நகராட்சிக்கு ரூ.43 லட்சத்தில் துப்புரவு வாகனங்கள்: எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் வழங்கினார்

 


திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் துப்புரவு பணிகளுக்காக ரூ .43.20 லட்சம் மதிப்பில், 4 மினிவேன், 20 மின் மோட்டார் பொருத்திய 3 சக்கர குப்பை அள்ளும் வாகனங்கள ஆகியவற்றை பல்லடம் எம்.எல்.ஏ., கறைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார். நகராட்சி ஆணையாளர் எஸ்.எஸ்.சுரேஷ்குமார், பொறியாளர் சங்கர், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், ஏ.எம்.ராமமூர்த்தி, தங்கவேல், தர்மராஜ், சித்ரா தேவி, பழனிசாமி, பாரதி செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார், பணப்பளையம் லட்சுமணன், என்.எஸ்.கே.நகர் சரவணன், ஞானாம்பிகை, துப்புரவு ஆய்வாளர் சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.