மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னையில் 24ந் தேதி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


 

சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்களின் கூட்டம் நடந்தது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற கோரி வருகிற 24ந் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து ஆட்டோ ஒட்டுனர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம்  கூறியதாவது:- 

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சாலை திருத்த மசோதாவை உடனடியாக திரும்ப பெற கோரி அனைத்து வாகன ஓட்டுனர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடக்கிறது. இதில் சி.ஐ.டி.யூ., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யூ.சி உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துக் கொள்கின்றன. சாலை போக்குவரத்து திருத்த மசோதா சட்டம் போக்குவரத்து தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு விரோதமானது. அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய சட்டத்தில் சாதாரண குற்றங்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. வாகன பதிவு, புதுப்பித்தல், பர்மீட் போன்ற கட்டணங்கள் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட அனைத்து வாகன ஒட்டிகளும் தங்களுடைய சுய தொழிலில் இருந்து வெளியேற்ற கூடியதாக உள்ளது.  மத்திய- மாநில அரசுகள் சட்டத்தில் உள்ள அபராத கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் சுயமாக தொழில் செய்பவர்கள் மத்தியில் கொத்தடிமைகளாக மாற்ற முயற்சிகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் துணை போகிறது. மோட்டார் வாகன தொழிலில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் அகற்றப்பட வேண்டும். பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களை அனுமதித்துவிட்டு கட்டணங்களை உயர்த்தி உள்ளனர்.  மோட்டார் வாகன தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டு கின்றனர். ஆட்டோ தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.