மழை நீரை வெளியேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை


 


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த டி நெடுஞ்சேரியில் தொடர்ந்து பெய்த கனமழையால் முருகன் கோவில் ரோடு பெயர்ந்து மழைநீர் வெளியே செல்வதற்கு வழி இல்லாமல் தெருக்களில்  தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்  மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களிடம் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றி தர வேண்டும் என்றும். 

இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.