15வது நிதி கமிஷனில் புதுச்சேரி, டெல்லி மாநிலங்களை இணைக்க வலியுறுத்தப்பட்டது -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 

15வது நிதி கமிஷனில் புதுச்சேரி, டெல்லி மாநிலங்களை இணைக்க வலியுறுத்தப்பட்டது சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி;

 


 

கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் புதுச்சேரி மாநில பிரச்சனைகள் குறித்து பேசினேன். 15வது நிதி கமிஷனின் தலைவர் கலந்துக் கொண்டனர். 29 மாநிலங்களும் மத்திய நிதி கமிஷனில் சேர்க்கப்பட்டு உள்ளன. யூனியன் பிரதேசங்களுக்கு நிதி கமிஷன் உள்ளது. புதுச்சேரி, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய நிதி கமிஷன் இல்லை. மாநிலங்களுக்கு மத்திய அரசு வரி வருவாயில் 42 சதவீதம் பிரித்து கொடுக்கிறது. யூனியன் பிரதேசங்களுக்கு 90 சதவீத நிதியை பிரித்து கொடுக்கிறது. ஆனால் புதுச்சேரிக்கு 26 சதவீத நிதியை வழங்குகிறது. மத்திய அரசு வருமான வரி, சுங்க வரி தங்களுடைய கணக்கில் எடுத்து கொண்டு புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய 42 சதவீத வரியை கொடுக்க மறுக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும். 15வது நிதி கமிஷனில் புதுச்சேரியை இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருந்தேன். 

 

புதிதாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை நிதி கமிஷனில் இணைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதுப்போல் புதுச்சேரி, டெல்லி ஆகிய மாநிலங்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜி.எஸ்.டி. கூட்டங்களில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் வரி குறைக்க வலியுறுத்தி வருகிறோம். ஒட்டல்களின் வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. தீப்பெட்டி குடிசை தொழிலாக செய்பவர்களுக்கு வரியை உயர்த்த கூடாது. மோட்டார் வாகனத்தில் வரி குறைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் அதிகாரிகள் மத்தியில் இருந்து எந்த பதிலும் இல்லை.