சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிறந்த நாள் விழா தெருமுனை கூட்டம்


சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 141- பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்கத்தின் மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர் முத்தமிழ் வரவேற்புரையாற்றினர். தந்தை பெரியார் திராவிடர் கழக சீர்காழி ஒன்றிய தலைவர் பொன்தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றியம் நந்தராஜேந்திரன், தந்தை, பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் பரசுராமன், மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சி மாவட்ட செயலாளர் முத்து, அன்பழகன், அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு வெண்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். ம.தி.மு.க தலைமை கழக பேச்சாளர் அழகிரி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியல் தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தியும் தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பிற்கு பொது தேர்வு அறிவித்ததை கணடித்தும் பா.ஜ.க தலைவர் ஹிந்தி மொழி நாட்டின் ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டது. சுயமரியாதை மாணவர் இயக்க சீர்காழி ஒன்றய பொறுப்பாளர்
சந்தானபாரதி நன்றி கூறினார்.