நத்தத்தில் 2000 ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்ற  நபர் மகனுடன் கைது


 

நத்தத்தில் 2000 ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்ற  நபர் மகனுடன் கைது. நத்தம் ஹோட்டலில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு மாற்ற முயன்ற நபர் தனது 13 வயது மகனுடன் கைது. அவரிடம் இருந்து 12 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்  மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் திண்டுக்கல் ரோட்டில் பிஸ்மி ஹோட்டல் செயல்பட்டுவருகிறது. வீரமணிகண்டன் என்பவர்  ஹோட்டலை நடத்திவருகிறார். நேற்று   வழக்கம்போல் வீரமணிகண்டன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அப்போது கடைக்கு காரில் வந்த ஆண் ஒருவர் தனது மகனுடன் ஹோட்டலில் பார்சல் வாங்கியுள்ளனர். அப்போது அந்த நபர் வாங்கிய பார்சலுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து விட்டு மீதி பணம் வாங்குவதற்காக கடையில் நின்று கொண்டிருந்தார்.

 


ரூ.2 ஆயிரத்தை வாங்கிய வீர மணிகண்டன், அந்த நோட்டில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது அந்த நோட்டை  சோதனை செய்தார். அப்போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து வீர மணிகண்டன் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கொடுத்த அந்த நபர் உடனிருந்த சிறுவனையும் கையும், களவுமாக பிடித்து, நத்தம் காவல்துறைக்கு ஒப்படைத்தார்.கள்ள நோட்டுடன்  அவரைக் கைது செய்த நத்தம் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ராஜம்முரளி தலைமையில்  போலீசார் விசாரணை நடத்தினர்.

 


விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் செவபேட்டை சொந்த ஊர் தற்போது சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஓம்சக்தி நகரில் வசித்து வரும்  சௌந்தரம் மகன் கிருஷ்ணன் (46) என்பது அவருடன் வந்த சிறுவன் அவரது  மகன் என்பதும்  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளியில் 8 வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. அந்த கள்ள நோட்டு அவருக்கு எப்படி கிடைத்தது? என்று கிருஷ்ணனிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது பல பகுதிகளில் கள்ள நோட்டுகள் விற்பனை செய்யும் நபர்களிடம்  1 லட்ச ரூபாய் அளித்தால் 2 லட்ச ரூபாய் தருவார்கள் அதை  இவர் தமிழகத்தின் பல கிராம பகுதிகளுக்கு சென்று சிறு சிறு வியாபாரம் பார்க்கும்  வியாபாரிகளிடம்  பொருட்களை வாங்கிவிட்டு கள்ளநோட்டை மாற்றி வந்துள்ளார் இதனை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் வீரமணி மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 2000 ரூபாய் தாள் 6 (ரூபாய் 12000/-)மற்றும் கள்ளநோட்டு மாற்ற பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் 13 வயது உடைய சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரிடம் கள்ள நோட்டு வழங்கி நபர்கள் பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். நத்தம் பகுதியில் கள்ளநோட்டு மாற்ற முயற்சித்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.