சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவ, மாணவியரின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவ, மாணவியரின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில், 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.டி. திடலில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் தங்களது முகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களை எழுதி பிரச்சாரம் மேற்கொண்டனர். பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுகாதாரம் காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி சென்றனர். எஸ்.ஆர்.டி திடல், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், வடக்குப்பேட்டை, கடைவீதி வழியாக கோட்டுவீராம்பாளையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.