சீர்காழி அருகே திருப்பன்கூரில் நந்தனார் குருபூஜை


நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோயிலை அடுத்த திருப்பன்கூர்
அருள்மிகு சௌந்திர நாயகி சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயிலில் 63 நாயன் மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் நாயனார் என்கிற நந்தனார் குருபூஜை நடைப்பெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.சிதம்பரம் வெங்கடேச தீட்சிதர் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் ஆன்மீக பேரவை ராம.பிரபு கருக்குடி வேதபுரீஸ்வரர் கோயில் நிர்வாகி ராஜேஷ் அய்யப்பன் கணேசன் பிரதோஷ கமிட்டி திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.