வேப்பூர் அருகே மக்காசோளத்தில் படைப்புழு தாக்கம் குறித்து ஆய்வு


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் அதிக பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விருத்தாச்சலம் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி இந்திராகாந்தி வேளாண் உதவி இயக்குனர்கள் பார்த்தசாரதி கீதா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் சாகுபடி பயிரில் படைப்புழு தாக்கம் தடுக்கும் வழிமுறைகள் சாகுபடி பரப்பளவு செலவீனம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வேளாண் அலுவலர்கள் தில்லைக்கரசி திவ்யா வேளாண் உதவி அலுவலர் கோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.