திருப்பூரில் தலைகவசம் மற்றும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் தலைகவசம் மற்றும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி பெற்றது.சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை இணைந்து  தலைகவசம் விழிப்புணர்வு மற்றும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தேசிய  தலைவர் R.செல்வகணேசன் மற்றும் உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளர் ஓம்ப்ரகாஷ் அறிவுறுத்தலின் பேரில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. பேரணியில் திருப்பூர் மாவட்ட செயற்குழு தலைவர் உமாநாத், உடுமலைப்பேட்டை காவல்துறையினர், தெற்கு மாவட்ட தலைவர் ராமு, வடக்கு மாவட்ட தலைவர் சதாசிவம், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் வஞ்சிமுத்து, வடக்கு மாவட்ட துணை பொருளாளர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்.