திருப்பூரில் சாலையோரம் முளைத்த கஞ்சா செடியால் பரபரப்புதிருப்பூரில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில் சாலையோரம் முளைத்த கஞ்சா செடியால் பரபரப்பு.

 


 

திருப்பூர் காந்திநகர் திருமலை நகர் பகுதியில் சாலையோரம் முளைத்த கஞ்சா செடியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நகரமான திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக ஏராளமான வடமாநில இளைஞர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

 
 

இவர்கள் குடியிருக்கும் பகுதிகளில்  கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இன் நிலையில் திருமலை நகர்  பகுதியில் சாலையோரம் முளைத்திருந்த இரண்டு கஞ்சா செடிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் குடியிருக்கும் நிலையில் அவர்கள் பயன்படுத்தும் கஞ்சா சிதறி சாலையோரம் கஞ்சா செடி முளைத்து இருக்கலாம் எனவும் இப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.