மார்கழி மாதம் கோலம் போடுவது ஏன்?

மார்கழி மாதம் கோலம் போடுவது ஏன்? தெரிந்துக்கொள்ளலாம் 



கோல வகைகள் கோலமும் அறிவியலும்:


நம்முடைய இந்துக்களின் கலாச்சாரத்தில் அடங்கியுள்ள அனைத்து பழக்க வழக்கங்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப் போக இவை மூட நம்பிக்கைகள் என முத்திரைக் குத்தப்பட்டுள்ளன.அவ்வகையில் கோலம் போடுதலில் மறைந்துள்ள அர்த்தங்கள் என்னவென்று பார்ப்போம்.


கோலத்தின் வகைகள்:



பிறந்த குழந்தையை வரவேரற்க தொட்டில் கோலம்சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம். கோலம் ஒருவகை யந்திரமாகக் கருதப்படுகிறது. அதனாலே இவை வீட்டு வாசலில் வரையப்பட்டன. மேலும் மார்கழியின் போது கோலம் போடுவது அவசியம் என்பதற்கு முக்கியக் காரணமும் உண்டு.

மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர்.


இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது.

உடல் ஆரோக்கியமும் கோலமும்:




ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.
மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட. இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோகியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

புள்ளி வைத்து கோலம் போடுவது ஏன்?




மேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுத்தவோடு உங்கள் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும். அனுதினமும் நீங்கள் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் போது நீங்கள் தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.
மேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.


அரிசி மாவால் கோலம் இடுவது ஏன்?




மேலும் அரிசி மாவில் கோலமிடுவது ஒரு வகை தானமே. மார்கழி மாதம் என்பது பனி, மழைக்காலம் என்பதால் எறும்பு, சிரு பூச்சிகள், மற்றும் குருவிகளுக்கு இந்த அரிசி மாவு உணவாக மாறுகிறது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடும் வழிபாட்டு முறை வகுக்கப்பட்டதன் காரணம் என்ன?


மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓஸோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும்.இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர்.நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்."மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர், விளக்கேற்றுகின்றனர்.மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு, நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசணிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள்.

இப்பழக்கம் பாண்டவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.



மார்கழி மாதத்தில் பாரதப் போர் நடந்தபோது, பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர்வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது. அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது. தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் அக்காலத்தில் இவ்வழக்கம் கையாளப்பட்டது. மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்.பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன.மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்....இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் வீடு அடுக்குமாடி குடியிறுப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.


 

Previous Post Next Post