சத்தியமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு பேர் பலி

சத்தியமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு பேர் பலி.சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை,  புதுவடவள்ளி கிராமம் அருகே இன்று மாலை லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணித்த சிறப்பு இலக்கு படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் அவருடைய மனைவி மகள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை சென்ற   சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி பண்ணாரி அடுத்து வடவள்ளி அருகே ஆடு   குறுக்கே வந்ததால், டிரைவர் தனது கட்டுப் பாட்டை இழந்து எதிரே வந்த காரின் மீது மோதியதில் வாகனத்தில் இருந்த சிறப்பு இலக்கு படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வம் (வயது 39) மற்றும் அவருடைய மனைவி தேவி (வயது 38) மற்றும் அவருடைய மகள் ஜனனி பிரியா (வயது ஒன்று)மற்றும் அவருடைய நண்பர் முருகேஷ் (வயது 40) நான்கு பேரும் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து காவல்துறை 4 சடலங்களையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உதவி ஆய்வாளரின் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.