ரூ.3.39 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு.

ரூ.3.39 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரம்பட்டி, வேப்பம்பாளையம், சித்தோடு மற்றும் ஈரோடு ஊராட்சி ஒன்றியம், பிச்சாண்டாம்பாளையம், வரதநல்லூரி  ஊராட்சிப் பகுதிகளில்  ரூ.3.39 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  வணிக வரி  மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் கா.பாலச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரம்பட்டி பகுதியில் மாவட்ட தொழில் மையம்  சார்பில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அழகு நிலையம் பணிகளையும், வேப்பம்பாளையம் பகுதியில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரும்பு தகடு உற்பத்தி செய்யும் பணிகளையும், சித்தோடு பகுதியில் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அம்மா இளைஞா; விளையாட்டு மைதானத்தையும், மேலும் வேப்பம்பாளையம் பகுதியில் ரூ.93.4 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ மையத்தினையும் என மொத்தம் ரூ.3.39 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளா;ச்சி திட்டப் பணிகளை பாh;வையிட்டு ஆய்வு செய்தார்.  



மேலும், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  வணிக வரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் கா.பாலச்சந்திரன்  மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்  அனைத்து துறை அலுவலர்களுடன் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள். இந்த ஆய்வு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  ச.கவிதா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) முனைவர்  மு.பாலகணேஷ், பொது மேலாளர்  (மாவட்ட தொழில் மையம்) கோவிந்தராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர்  விஜயகுமார் உதவி இயக்குநர்  (ஊராட்சிகள்) மு.விஜயசங்கா;, பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சி.மோகனபிhpயா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



 





Previous Post Next Post