கொள்ளிடம் அருகே  தென்னைமரக்கன்றுகள் மட்டும் திசு வாழைக்கன்றுகள் வழங்கும் விழா

கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் தென்னைமரக்கன்றுகள் மட்டும் திசு வாழைக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கொள்ளிடம் அருகே சியாளம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை அமைக்கப்படும். ஒன்றியகுழு தலைவர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும்  தென்னைமரக்கன்றுகள் மட்டும் திசு வாழைக்கன்றுகள் வழங்கும் விழா கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் இளவரசன் வரவேற்றார். தொழிலதிபர் சகாதேவன் ஒன்றிய தி.மு.க அவைத்தலைவர் ராஜேந்திரன், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்  செல்லசேதுரவிக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் விமலாசுதாகர், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலை வகித்தனர்.  


விழாவில் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டு, 2 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 2 ஆயிரம் திசு வாழைக் கன்றுகளை சீயாளம் ஊராட்சியைச் சேர்ந்த அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கி பேசுகையில், சீயாளம் மயானத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், சாலை அமைத்து தர உடன் நடவடிக்கை எடுக்கப்படும் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்குகள் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரப்படும். அடிப்படை வசதிகள் கேட்டு எந்த நேரமும் என்னை தொடர்புகொள்ளலாம் என்றார். விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், கட்சி நிர்வாகிகள் ஒன்றியக்குழு உறுப்பினர்களுடன், சீயாளம், புத்தூர், மயிலக்கோயில் ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்காளார்களுக்கு நன்றி தெரிவித்தார்.