மதியம் கட்டிங், ராத்திரிக்கு குவார்ட்டர்!! தொழிலாளிகளை கவர திருப்பூரில் தாங்க இந்த நிலைமை!


திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு பணியாட்கள் கிடைக்காத நிலையில் மதியம் கட்டிங் இரவு குவாட்டர் என பணியாளர்களை கவர ஒட்டப்பட்ட விளம்பரத்தால் பரபரப்பு.


பின்னலாடை நகரான திருப்பூரில் ஆண்டுக்கு 26,000 கோடி ஏற்றுமதியும் 18 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு தற்பொழுது ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. பணியாளர்கள் வேலைக்கு வந்தாலும் பாதி நாட்கள் பணிபுரிந்து திரும்பி வராத சூழல் நிலவுகிறது இதனால் முன்னதாக பெறப்பட்ட ஆர்டர்கள் முடிந்து தரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர் இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பல நிறுவனங்களுக்கு போதிய ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் திருப்பூரில் உள்ள சிறு பின்னலாடை நிறுவன உரிமையாளர் பேட்லாக் என்னும் தையல் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆட்கள் தேவை என பலமுறை தெரிவித்தும் ஆட்கள் கிடைக்காததால் பணிக்கு வருபவர்களுக்கு மதியம் இரவு குவாட்டர் மற்றும் டீ காசு வழங்கப்படும் என சுவரொட்டி அடித்து ஓட்டியுள்ளார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் செந்தில்வேல் என்பவர் அந்த நபருக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசிய போது பலவிதமாக ஆட்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆட்கள் வந்துவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தற்பொழுது இந்த சுவரொட்டி விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Previous Post Next Post