வச்சான் பாரு ஆப்பு.. முதல் நாளிலேயே ' தர்பார் ' படத்தை தட்டி தூக்கிய தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் தான்.


தமிழ் ராக்கர்ஸ் சினிமா உலகத்துக்கு எதிராக இருந்த போதிலும் அதற்கான ஒரு பெரிய பார்வையாளர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறது.


எந்த திரைப்படம் புதிதாக வெளிவந்தாலும் அந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாகவே ஆன்லைனில் வெளியிட்டு அதகளம் செய்வது தமிழ் ராக்கர்ஸ் ஸ்டைல்.


பல கோடிகளை செலவு செய்து, முன்னணி நட்சத்திரங்களுக்கு சம்பளம் கொடுத்து படாதபாடுபட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ் ராக்கர்ஸ் ஐ நினைத்து பொருமாத நாட்களே இல்லை.


இப்படி ஊருக்கு சவால்விட்டு படங்களை ரிலீஸ் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் செய்யும் அட்டூழியத்திற்கு அளவு இல்லாமல் போய்விட்டது. 


புதுப்படங்கள், வெப் சீரியஸ் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் சுட்டு சுட்டு 'சுட்ட படமாக' சுடச்சுட வெளியிட்டு விடுகிறது. இதனால் தமிழ் திரையுலகத்திற்கு தினமும் 'பிபி டேப்லெட்' சாப்பிட வேண்டியது அவசியமாகி விடுகிறது. 


அந்த வகையில் இந்திய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி நடிக்கும் தர்பார் திரைப்படத்தை ரிலீஸ் நாளான இன்று வெளியீட்டு அலப்பறை செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். 


முழுப்படத்தையும் பிசிறில்லாமல் வீடியோ செய்து வெளியிட்டு லைக்கா நிறுவனத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது தமிழ் ராக்கர்ஸ். அதேநேரம் தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்களோ புது படத்தை உடனே டவுன்லோடு செய்து குஷியில்பார்க்கும் குஷியில் இருக்கிறார்கள். 


திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் என்ன செய்வதென்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண் டுள்ளது. தியேட்டரில் ஓடுகிறதோ இல்லையோ? தமிழ்ராக்கர்ஸில் பட்டையை கிளப்பிக்கொண்டு ஓடுகிறது ரஜினிகாந்தின் தர்பார்.


இந்த தமிழ் ராக்கர்ஸ் பூனைக்கு மணிகட்ட திரையுலகில ஆளே இல்லை என்றும், ரஜினி படததுக்கே ' வைச்சான் பாரு ஆப்பு ' என்று தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்களும் கொஞ்சம் ஓவரா தான் குதிக்கிராங்க...