குடியரசு நாள்: கலர்புல் கலைநிகழ்ச்சிகளுடன் திருப்பூரில் கோலாகல விழா!!


 


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் விஜய கார்த்திகேயன் தேசியகொடியை ஏற்றி வைத்தார். விழாவில் 93 லட்சம் மதிப்பிலான நல்ல உதவிகள் வழங்கப்பட்டது

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


விழாவில் 515 பேருக்கு, 93.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் துறை காவலர்களுக்கு 39 பேருக்கும், மாநகர காவலதுறை யினர் 16 பேர் என 55 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது.
239 பேருக்கு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் எஸ். பி., திஷா மித்தல், மாநகர கமிஷனர் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு.