மொழிப்போர் தியாகிகளுக்காக உண்மையாக உழைத்த இயக்கம் அதிமுக: நடிகர் சுந்தர்ராஜன் பேச்சு
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் கே.வி.ஆர்., நகரில் நடைபெற்றது.  திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், தலைமை கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான சுந்தரராஜன், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளரும், பல்லடம் எம்.எல்.ஏ., வுமான கரைப்புதூர் நடராஜன், தலமை கழக பேச்சாளர் மதுரபாரதி, சிராஜுதீன், மகேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
 கூட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி தலைமை தாங்கினார்.  
 இந்த கூட்டத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:
 மொழிபோர் தியாகிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அதிமுக மட்டுமே தகுதி உள்ள இயக்கமாகும். அந்தளவுக்கு தமிழ் மொழிக்காக இந்த இயக்கம் பணியாற்றி உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஏழை, எளிய மக்களுக்காக அதிமுகவை துவக்கினார். தலைவர் ஆட்சியிலும், அம்மா ஆட்சியிலும் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ச்சியாக திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. என்றார்.  
தலைமை கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான சுந்தரராஜன் பேசும்போது :  உலக அளவில் தமிழுக்காக உதவியவர்கள் எம்.ஜி.ஆரும் அம்மா அவர்களுமே. மற்றவர்கள் எல்லாம் காரண காரியத்துடன் செய்தார்கள். இன்று எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர்., போல முதல்வர் ஆக வேண்டும் என்று வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., அவர்கள் படத்தில் நடிக்கும்போது கூட இறுதியில் வில்லனையும் காப்பாற்றுவார். அது போல இன்று எடப்பாடி பழனிசாமி அவர்களும், ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அனைவரையும் காப்பாற்றி வருகிறார்கள். என்றார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் பேசும்போது கூறியதாவது:
 தமிழ் மொழிக்காக பாடுபட்ட இயக்கம் இது. அனைத்து மக்களும் நலம் வாழ்வதற்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் எளிமையான தொண்டர்களின் ஆட்சி; இந்த ஆட்சியில் தான் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் எளிதில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற முடியும். என்றார்.
 இந்த கூட்டத்தில், வி.எம்.சண்முகம், ஜெ.ஆர்.ஜான், கண்ணப்பன், சடையப்பன், கருவம்பாளையம் மணி, பாரப்பாளையம் ரவி, கே.என்.சுப்பிரமணி, மு.சுப்பிரமணி, சில்வர் வெங்கடாசலம், பட்டுலிங்கம், ஏ.எஸ்.கண்ணன், சித்துராஜ்,  மாரிமுத்து, ரத்தினசபாபதி, மேலூர் மணி, சலவை மணி, மருதையப்பன்,  பொன்மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.