வேலூர் மாவட்டம் - விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா!!!

வேலூர் மாவட்டம் புதியபேருந்துநிலையம் அருகில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் இரு சக்கர மோட்டர் வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்கள். 


 


வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1௦-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ஓட்டல் கிராண்டு கிருஷ்ணாவில் பாராளுமன்ற நிலை குழுவினர்களுடன் விவசாய பெருமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. உடன் மாவட்ட கலெக்டர்  அ.சண்முகசுந்தரம்உள்ளார். வேலூர் மாவட்டம் ஊரிசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப் பினர் ஜி.லோகநாதன், ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன் உள்ளனர்.