ஆயிரம் கோடி ரூபாயை அசால்ட்டாக குடித்து தீர்க்கும் தமிழன்!!! - பொங்கல் பண்டிகையில் ஓவரா பொங்கிட்டாங்க...

உலக முளைக்க தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் பண்டிகை. தீபாவளி உள்ளிட்ட மற்ற பண்டிகைகள் காட்டிலும் பொங்கல் பண்டிகைக்கு அதிகநாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஒரு பெரிய பொழுதுபோக்கு காலமாகவும்,பொங்கல் கொண்டாடும் காலமாகவும் பொங்கல் பண்டிகையை கருதுகிறார்கள்.


சாதாரண நாட்களிலேயே குடித்து தள்ளும் குடிமகன்களுக்கு, பொங்கல் பண்டிகை மற்றும் அது சார்ந்த விடுமுறைகள் மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகிப் போகிறது. குடியும் குடித்தனமாக பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்கள்.


சில இளசுகளும் தங்கள் பங்குக்கு வாங்கி குடித்து தள்ளியுள்ளனர்.


இதனால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை காலத்தில் மது விற்பனை ஜோராக இருந்தது.606 கோடியே 72 லட்சம் ரூபாய்-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 606 கோடியே 72 லட்சம் ரூபாய்-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.


இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனி, ஞாயிற்று கிழமையுடன் முடிவடைகிறது. இந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 380 ரூபாய் கோடி வரை மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்மூலம் தமிழக அரசுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது.