ரஜினியை விசாரணைக்கு அழைப்பார்களாம்..!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: “தேவைப்பட்டால் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம்”


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேவைப்பட்டால் நடிகர் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம் என ஒரு நபர் விசாரணை ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர்.


இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் இதுவரை 17 கட்ட விசாரனை நடத்தியதில் 432 பேரிடம் விசாரனை நடத்தி உள்ளது.இந்நிலையில் 18-ஆம் கட்ட விசாரனை கடந்த 22-ம் தேதி தொடங்கிய 18-ஆம் கட்ட விசாரனை சனிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் இதுவரை 445 பேரிடம் விசாரனை நடைபெற்றுள்ளது. மேலும் 650 ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன.


அடுத்த கட்ட விசாரனைகாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள்  கேட்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் காலம் கடத்துவதாகவும் கூறப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டக்காரர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.


இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் இன்று தூத்துக்குடியில் கூறுகையில், இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினியை விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு அளித்துள்ளதாகக் கூறினார். 


இதனால் நடிகர் ரஜினிகாந்தை நேரில் அழைத்து விசாரிக்க வாய்ப்புள்ளதாக ஆணைய வழக்குரைஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post